உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 22, 2010

குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள செங்கால் ஓடையில் உடைப்பு : 350 ஏக்கர் பயிர்கள் மூழ்கின




குறிஞ்சிப்பாடி : 

             கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள செங்கால் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு, அயன்குறிஞ்சிப்பாடி, ரெட்டிபாளையம் பகுதியில் 350 ஏக்கர் நெல் மற்றும் கரும்பு பயிர்கள் நீரில் மூழ்கின. தமிழகத்தில் பருவ மழையால் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

              இதனால், இப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. நெய்வேலி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மற்றும் மழை நீர் கன்னியாகோவில் ஓடை மற்றும் செங்கால் ஓடை வழியாக பரவனாற்றில் கலக்கிறது. ரெட்டிபாளையம் பகுதியில் செங்கால் ஓடையின் அணை பகுதி தாழ்வாகவும், பலவீனமாகவும் இருந்ததால், நேற்று முன்தினம் இரவு உடைப்பு ஏற்பட்டது. இதனால், அயன்குறிஞ்சிப்பாடி, ரெட்டிபாளையம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள 300 ஏக்கர் நெற்பயிர் மற்றும் 50 ஏக்கர் கரும்பு பயிர் முழுவதையும் தண்ணீர் சூழ்ந்தது.

                        மேலும், வயல்வெளி வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மண் அரிப்பு ஏற்பட்டு, 350 ஏக்கரில் இனி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior