சிதம்பரம் :
பருவமழை தீவிரமடைந்து வருவதால் வீராணம் உட்பட கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகள், குளங்கள், ஏரிகள் மழை நீரால் நிரம்பி வருகிறது. வீராணம் ஏரியில் மழை துவங்கியதையடுத்து ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில் 978.20 மில்லியன் கன அடி தொடர்ந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. செங்கால் ஓடை, பாப்பாக்குடி, கருணாகரநல்லூர் வாய்க்கால்கள் மூலம் ஏரிக்கு வரும் 500 கன அடி தண்ணீர் அதே அளவில் வெளியேற்றப்படுகிறது.
மேலும் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வாலாஜா ஏரியில் இருந்து பரவனாறு வழியாக 3,600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருமாள் ஏரியில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து வெள்ளாற்றில் 4,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு 74 கன அடியும், சேத்தியாத்தோப்பு வெள்ளாற்று வடி கால் மூலம் 350 கன அடியும் வெளியேற்றப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக