கடலூர் :
திருவள்ளுவர் பல்கலைக்கழக ஹாக்கி அணிக்கான தேர்வுப் போட்டி நேற்று கடலூரில் நடந்தது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான அகில இந்திய ஹாக்கி போட்டி வரும் நவம்பர் மாதம் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் நடத்துகிறது. இப்போட்டியில் பங்கேற்க திருவள்ளுவர் பல்கலைக்கழக அணிக்கான தேர்வுப் போட்டி நேற்று கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.
கடலூர் மற்றும் வேலூர் மண்டலங்களைச் சேர்ந்த கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணாமலை அரசு கல்லூரிகள், நெய்வேலி ஜவகர், கடலூர் செயின்ட் ஜோசப், குடியாத்தம் கே.எம்.சி., வேலூர் ஊரீஸ், திருவண்ணாமலை சன் கலைக்கல்லூரி, திருவண்ணாமலை சண்முகா கல்லூரி, மேல்விசாகம் அப்துல் லக்கீம், திருப்பத்தூர் சேக்ரட் ஹார்ட் ஆகிய 12 கல்லூரிகள் பங்கேற்றன.போட்டியை கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி செயலர் ரட்சகர் துவக்கி வைத்தார். திருவள்ளுவர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் அமுல்தாஸ் முன்னிலையில் போட்டிகள் நடந்தன. ஏற்பாடுகளை கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜமாணிக்கம் செய்திருந்தார்.