கட லூர், நவ. 29:
கடலூர் அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து இளம் குற்றவாளிகளான 4 சிறுவர்கள், ஞாயிற்றுக்கிழமை தப்பி ஓடிவிட்டனர். கடலூர் கடற்கரைச் சாலையில் அரசு கூர்நோக்கு இல்லம் என்ற சிறுவர் சீர்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் இளம் குற்றவாளிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை தப்பி ஓடிவிட்டனர். விக் கிரவாண்டியைச் சேர்ந்த ராஜா (16), வடலூர் கருங்குழியைச் சேர்ந்த ரமேஷ் (15), கடலூர் முதுநகரைச் சேர்ந்த விக்னேஷ் (15), நாராயணன் (15) ஆகிய அந்த 4 பேரும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டு இருந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை அவர்கள் 4 பேரும் கூர்நோக்கு இல்லத்தின் பின்பக்கச் சுவர் வழியாக ஏறிக்குதித்து தப்பி விட்டனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய சிறுவர்களைத் தேடி வருகிறார்கள்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக