கட லூர், நவ. 29:
ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட தென் மண்டல போட்டிகளில், மேடைக் கலைப் போட்டியில் கடலூர் மாணவி சஜீவன் ஆர்யா தேர்ந்து எடுக்கப்பட்டார். இதுகுறித்து கடலூர் மாவட்ட இசைப் பள்ளி தலைமை ஆசிரியர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
க டலூரில் உள்ள மாவட்ட இசைப் பள்ளியில் ஜவகர் சிறுவர் மன்றம் இயங்கி வருகிறது. இதில் 150 குழந்தைகள் பல்வேறு கலைப் பயிற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர். மன்றம் வாயிலாக 9 முதல் 16 வயது வரையிலான மாணவர்களுக்கு மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தி தேர்வு பெற்றவர்கள் தென்மண்டல அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் இருந்து சென்ற 4 பேரில் மாணவி சஜீவன் ஆர்யா (செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளி, கடலூர்) மேடைக் கலை போட்டியில் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் புதுதில்லியில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 5-ம் தேதி வரை நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பார், இதில் வெற்றி பெறுவோருக்கு குடியரசுத் தலைவரால் "இளம்திரு விருது' வழங்கப்படும். சஜீவன் ஆர்யாவுக்கு மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் பாராட்டுத் தெரிவித்தார் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக