சிதம்பரம் நகர தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உணவு மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளர் சி.க.விஜயகுமார் தலைமை வகித்தார். நகர அவைத் தலைவர் டி.கே.பி.ராமர் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.உமாநாத், மாநில பட்டதாரி அணி துணைச் செயலாளர் பேராசிரியர் பூ.ராஜமன்னன், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பாலு, மாவட்ட அவைத் தலைவர் ஆர்.ஞானப்பிரகாசம் ஆகியோர் பங்கேற்று ஏழை இஸ்லாமிய மக்களுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கினார்கள். நகர பொருளாளர் ப.கணேசன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக