கட லூர், நவ. 29:
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு மதுக்கடைப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். கல்வித் தகுதிக்கு ஏற்ப மாற்றுப் பணி வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மது விற்பனையில் 1 சதம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துப் பணியாளர்களுக்கும் நிலுவைத் தொகை வழங்க வேண்டும். வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை வழங்க வேண்டும். 8 மணி நேர வேலைத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இந்த ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஊர்வலம் திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகில் இருந்து புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தது. ஊர்வலத்தை அரசுப் பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் கோ.சீனுவாசன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கே.சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் கோவிந்தராஜன் வரவேற்றார். அரசு தொழில் நுட்பப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சுந்தரராஜா, அரசுப் பணியாளர் சங்க மாவட்டப் பொருளாளர் ராஜாமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அரசுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் பி.நல்லதம்பி நிறைவு உரை நிகழ்த்தினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக