உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 30, 2009

அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த நடவடிக்கை

கடலூர், நவ. 28:

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பில் சிறப்பாகப் பயிலும் மாணவ மாணவியருக்கு வியாழக்கிழமை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. கல்வித் தரத்தில் கடந்த ஆண்டு கடலூர் மாவட்டம் தமிழகத்தில் பிளஸ்-2 பிரிவில் 26-வது இடத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. பிரிவில் 27-வது இடத்திலும் இருந்தது. கடலூர் மாவட்டத்தின் கல்வித் தரத்தை உயர்த்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களையும் அழைத்து, ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. பள்ளிகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததற்கும் மோசமான மதிப்பெண்கள் எடுத்ததற்கும் காரணங்கள் ஆராயப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் காலாண்டுத் தேர்வுகள் முடிவுற்றதும், பள்ளி வாரியாக மாணவர்களின் மதிப்பெண்கள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கும் கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலரால் நடத்தப்பட்டது. அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண்கள் பெறவும் ஆலோசனைகள் பெறப்பட்டு அறிவுரைகளும் வழங்கப்பட்டன. அரையாண்டுத் தேர்வுகள் முடிவுற்றதும் இதேபோல் ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. மேலும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளில் அதிக மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெற்றாவது வெற்றிபெறும் வகையில் அனைத்துப் பாடங்களுக்கும் கையேடுகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்தக் கையேட்டில் உள்ள பாடங்களை ஒழுங்காகப் படித்தாலே போதும், 40 மதிப்பெண் பெற முடியும் என்ற நிலையை உருவாக்கும் முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது. ÷அடுத்த கட்டமாக சிறப்பாகப் ப.யிலும் மாணவர்களை, மேலும் அதிக மதிப்பெண்களை பெறச் செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த பிளஸ்-2 பொதுத் தேர்வில் இயற்பியல் பாடத்தில் 3 மாணவர்கள் மட்டும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றனர். ஆனால் 199 மதிப்பெண் பெற்றவர்கள் 68 பேர். வேதியியல் பாடத்தில் 200 மதிபெண் பெற்றவர்கள் 11 பேர். ஆனால் 199 மதிப்பெண் பெற்றவர்கள் 33 பேர். உயிரியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெற்றவர்கள் 3. ஆனால் 199 மதிப்பெண் பெற்றவர்கள் 29 பேர். கணிதத்தில் 200 மதிப்பெண் பெற்றவர்கள் 109 பேர். ஆனால் 199 மதிப்பெண் பெற்றவர்கள் 340 பேர். 199 மதிப்பெண் பெற்றவர்கள் ஏன் 200 மதிப்பெண் பெறமுடியாமல் போயிற்று? என்ற அடிப்படையில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்க இந்த ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலாண்டுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்று இருக்கும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி மாணவர்களுக்கு புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியிலும், பிளஸ்-2 மாணவர்களுக்கு திருப்பாப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியிலும் அனுபவம் மிக்க ஆசிரியர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சிக்கு கடலூர் முதுநகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ராஜேந்திரன் பொறுப்பு ஏற்று நடத்தினார். சிறப்புப் பயிற்சி வகுப்புகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி பார்வையிட்டு, மாணவ மாணவியருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior