சிதம்பரம்:
தமிழக அரசின் கான் கிரீட் வீட்டு வசதி திட்டத் தின் கீழ் பயனாளிகள் கணக்கெடுப்பு கடலூர் மாவட்டத்தில் 29ம் தேதி துவங்குகிறது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்தார்.
சிதம்பரம் அடுத்த இளநாங்கூர் கிராமத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி 9 பேருக்கு வீட்டுமனை பட்டா, 7 பேருக்க தையல் இயந்திரம், ஒருவருக்கு சலவை பெட்டி, கிராம நிர்வாக அலுவலர்களின் ஐந்து குடும்பங்களுக்கு பணிக்கொடை மற்றும் சிறப்பு சேம நலநிதி, மூவருக்கு தனிநபர் கடன், 29 பேருக்கு விதவை மற்றும் முதியோர் உதவிதொகை என மொத்தம் 18 லட்சம் ரூபாய் மதிப்பில் 89 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தில் வீடு கட்டுவதற்கான கணக்கெடுப்பு மாவட்டத்தில் 29ம் தேதி துவங்குகிறது. அதற் காக பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறைகேட்பு முகாமையொட்டி ஏற்கனவே வரப்பெற்ற 319 மனுக்களில் 141 மனுக்கள் ஏற்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 64 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. 41 மனுக்கள் தள் ளுபடி செய்யப்பட்டன. இன்று 166 மனுக்கள் வரப் பெற்றது. இந்த மனுக்கள் பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முகாமில், தாசில்தார் காமராஜ், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஜெயக்குமார், பிற்பட் டோர் நல அலுவலர் பாலசுப்ரமணியன், பி.டி.ஓ., பாலசுப்ரமணியன், வட்ட வழங்கல் அலுவலர் மூர்த்தி, டாக்டர் பாரிவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக