கடலூர்:
மாவட்டத்தில் போலி மற்றும் காலாவதியான மருந்து மாத்திரைகள் குறித்த ஆய்வு நடந்தது.
தமிழகம் முழுவதும் போலி மற்றும் காலாவதியான மருந்து மாத்திரைகள் விற்பதாக வந்த தகவலின் பேரில் மருந்து கட்டுப் பாட்டு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில் மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் மருந்து கட்டு பாட்டு ஆய்வாளர் குருபாரதி தலைமையிலான குழுவினர் கடலூர், விருத்தாசலம், பெண்ணாடம் பகுதிகளில் சில் லரை மற்றும் மொத்த வியாபார மருந்து கடைகளில் ஆய்வு மேற் கொண்டனர். ஆய்வின் போது போலி மற்றும் காலாவதியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதுபற்றி ஆய்வாளர் குருபாரதி கூறுகையில்
'கடலூரில் கடந்த 17ம் தேதி 'பெனட்ரில் இருமல் 'சிரப்' பறிமுதல் செய்தோம். அதன் பிறகு மாவட்டத் தின் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை போலி மற்றும் காலாவதியான மருந்துகள் இல்லை என சோதனையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படும்' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக