பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன. பாலிடெக்னிக் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்று, 2 ஆண்டு பணி அனுபவம் இருப்பவர்கள் இந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
2010-11 ஆண்டில் பகுதி நேர பி.இ., பி.டெக்., பொறியியல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகளில் தேர்ச்சி பெற்று, 2 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் பணிகளில் இருப்பவர்கள் இந்த படிப்புகளில் சேரலாம்.
அதற்கான விண்ணப்பங்கள், சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம், கோவை, சேலம், திருநெல்வேலி, காரைக்குடி, வேலூர், பர்கூர் ஆகிய இடங்களில் அரசு பொறியில் கல்லூரிகள், கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் ஏப்ரல் 26ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் வழங்கப்பட உள்ளன.
விண்ணப்பக் கட்டணம் ரூ.300 (எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.150). கட்டணத்தை "செயலர், பகுதிநேர பி.இ. மாணவர் சேர்க்கை, கோவை'' என்ற பெயரில் கோவையில் செல்லத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை தபால் மூலமாகவும் பெறலாம். விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கு ஏப்ரல் 26ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக