கடலூர்:
கடலூர் தெரசா கேத்தரின் எழுதிய "புவியியலைப் புரிந்து கொள்வோம்' என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவிஞர் வெற்றிச்செல்வி தலைமை வகித்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்க கடலூர் கிளைச் செயலாளர் ஆசைத்தம்பி வரவேற்றார். "புவியியலைப் புரிந்து கொள்வோம்' என்ற நூலை, கடலூர் புனித வளனார் கல்லூரி துணை முதல்வர் சூசை ஜான் ரொசாரியோ வெளியிட, முதல் பிரதியை முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் பெற்று கொண்டார். அதைத் தொடர்ந்து செம்மொழித் தமிழுக்கு செய்ய வேண்டியவை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் எழுத்தாளர் சங்க மாநிலச் ராமச்சந்திரன் உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து கவியரங்கம் நடந்தது.

கடலூர் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன், முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் ஜீவகாருண்யன், மாவட்டத் தலைவர் ஆறு.சேகர், பொருளாளர் வெங்கடேசன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் காசிநாதன், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் முத்துக்குமாரசாமி, வழக்கறிஞர் மன்றவாணன் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செய்து இருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக