உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 27, 2010

காச நோய்க்கு அதிக நிதி: என்எல்சிக்கு விருது

நெய்வேலி:
 
              கடலூர் மாவட்டத்தில் காசநோய்க்கு அதிக நிதி வழங்கிய என்எல்சி நிறுவனத்துக்கு மாவட்ட ஆட்சியர் சீதாராமன் விருது வழங்கி கௌரவித்தார். காசநோய் ஒழிப்புக்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இம்முயற்சியில் பொதுமக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக ஊழியர்கள் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் மூலமாக நிதி திரட்டப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்ட காசநோய் தடுப்பு மையம் நடத்திய காசநோய் ஒழிப்பு நடவடிக்கையில் என்எல்சி நிறுவனம் ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கியது. இதன்மூலம் என்எல்சி நிறுவனம் மாவட்டத்திலேயே அதிகபட்ச நிதி வழங்கி முதலிடம் வகிக்கிறது. இதை கெüரவிக்கும் பொருட்டு உலக காச நோய் தினமான மார்ச் 24-ம் தேதி கடலூரில் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சீதாராமன் கலந்துகொண்டு என்எல்சி நிறுவனத்துக்கு விருதை வழங்கினார். என்எல்சி நிர்வாகத் துறை முதன்மைப் பொதுமேலாளர் லூர்தஸ் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காசநோய் தடுப்பு மையத்தின் கௌரவச் செயலர் எம்.மனோகரன் உள்ளிட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior