கடலூர் :
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மூன்று பாடங்களுக்குள் தோல்வி அடைந்தவர்களுக்கான உடனடி மறு தேர்வு அட்டவணை அறிவிக்கப் பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தேர்வு எழுதிய 6 லட்சத்து 82 ஆயிரத்து 607 மாணவ, மாணவிகளில் ஐந்து லட்சத்து 81 ஆயிரத்து 251 பேர் தேர்ச்சி பெற்றனர். ஒரு லட்சத்து ஆயிரத்து 356 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. இவர்களில் ஏதேனும் மூன்று பாடங்களில் மட்டும் தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடி மறு தேர்விற்கான அட்டவணையை பள்ளி கல்வித்துறை இயக்குனர் நேற்று வெளியிட்டார்.
தேர்வு அட்டவணை விவரம் வருமாறு:
வரும் 29ம் தேதி காலை (10 மணி முதல் 1.15 வரை) மொழி முதல் தாள், 30ம் தேதி மொழி 2ம் தாள், ஜூலை 1ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 2ம் தேதி ஆங்கிலம் 2ம் தாள், 3ம் தேதி இயற்பியல், வணிகவியல், 5ம் தேதி காலை வேதியல், பொருளியல், மதியம் ( 2 மணி முதல் 5.15வரை) தொழிற்கல்வி கருத்தியல் பாடப்தேர்வுகள் நடக்கிறது. அதே போல், 6ம் தேதி காலை கணிதம், விலங்கியல், கணக்கியல், மதியம் அடிப்படை அறிவியல், புவியியல், 7ம் தேதி காலை உயிரியல், தாவரவியல், வரலாறு. மதியம் நுண்ணுயிரியல், சிறப்பு மொழியியல், 8ம் தேதி காலை அரசியல் அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிர் வேதியியல், மதியம் புள்ளியியல், தட்டச்சு, மனையியல், தொடர்பு ஆங்கிலம், 9ம் தேதி காலை வணிக கணிதம், இந்திய கலாசாரம், நர்சிங் (பொது), சத்துணவு மற்றும் உணவூட்டவியல், மதியம் சுருக்கெழுத்து மற்றும் சைக்காலஜி பாடத் தேர்வுகள் நடக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக