உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 12, 2010

உலக கோப்பை: பிரான்ஸ் அதிர்ச்சி "டிரா'

 

 


கேப்டவுன்: 

                     உலக கோப்பை லீக் போட்டியில் பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி. உருகுவேயுடனான போட்டியை பரிதாபமாக டிரா(0-0) செய்தது. தியரி ஹென்றியை மிகவும் தாமதமாக களமிறக்கியது பிரான்ஸ் அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
 
                      தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று "ஏ' பிரிவில் நடந்த லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ், உருகுவே அணிகள் மோதின. ஜிடேன் ஓய்வு, பிரான்ஸ் அணிக்கு சிக்கலாக அமைந்தது. இவர் இல்லாமல், கடந்த 1994க்கு பிறகு முதல் முறையாக களமிறங்கியது.
 
ஹென்றி இல்லை:
 
                    முதல் பாதியில் பிரான்ஸ் சார்பில் அனுபவ வீரர்களான தியரி ஹென்றி மற்றும் பிளாரன்ட் மலூடா களமிறக்கப்படவில்லை. ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் இந்த அணியின் பிராங்க் ரிபரி, பந்தை அருமையாக "பாஸ்' செய்தார். இதனை பெற்ற கோவு, கோல் அடிக்க தவறினார். பின் 11வது நிமிடத்தில் உருகுவே அணியின் சாரஸ், கோல் போஸ்டை நோக்கி முன்னேறி சென்றார். ஆனால், அம்பயர் "ஆப் சைடு' என அறிவிக்க, ஏமாற்றம் அடைந்தார்.
 
முரட்டு ஆட்டம்:
 
          பிரான்ஸ் வீரர்கள் ஒரு கட்டத்தில் முரட்டு ஆட்டத்துக்கு மாறினர். இதையடுத்து கேப்டன் பாட்ரிஸ் எவ்ரா, பிராங்க் ரிபரி "எல்லோ கார்டு' எச்சரிக்கை பெற்றனர். உருகுவே அணியின் தற்காப்பு பகுதி வலிமையாக இருந்ததால், பிரான்ஸ் அணியால் முன்னேறிச் செல்ல இயலவில்லை. முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
 
தவறான முடிவு:
 
                     இரண்டாவது பாதியிலும் பிரான்ஸ் அணியினர் மந்தமாக ஆடினர். இதையடுத்து 72வது நிமிடத்தில் அனல்காவுக்கு பதிலாக தியரி ஹென்றி களமிறக்கப்பட்டார். 75வது நிமிடத்தில் மலூடாவும் மாற்று வீரராக வந்தார். இரண்டு நட்சத்திர வீரர்களை மிகவும் தாமதமாக களமிறக்கியது பிரான்ஸ் அணிக்கு பின்னடைவாக அமைந்தது. பயிற்சியாளர் ரேமண்ட் டோமெனக்கின் இம்முடிவு மிகுந்த அதிர்ச்சி அளித்தது.
 
"கை' பந்து:
 
                    ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் நிக்கோலஸ் லொடியிரா "ரெட் கார்டு' பெற்று வெளியேறினார். இதையடுத்து உருகுவே 10 வீரர்களுடன் விளையாட நேர்ந்தது. பின் 89வது நிமிடத்தில் ஹென்றி கோல் அடிக்க முயன்றார். அப்போது உருகுவே வீரர் விக்டோரினோ தனது கையால் தவறாக தடுத்ததாக, ஹென்றி வாதிட்டார். இதனை நடுவர் கண்டுகொள்ளவில்லை. பின் கடைசி கட்டத்தில் கிடைத்த "பிரீகிக்' வாய்ப்பையும் ஹென்றி வீணாக்க, பிரான்ஸ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காத நிலையில் போட்டி டிரா(0-0) ஆனது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior