உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 12, 2010

வேளாண் இளநிலைப் படிப்பு: மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல்

                  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வழங்கும் இளநிலைப் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

                    மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கவுன்சலிங் ஜூன் 16-ல் துவங்கி ஜூன் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிஎஸ்ஸி-யில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், மனையியல் ஆகிய படிப்புகளும் பிடெக்-கில் வேளாண் பொறியியல், உணவுப் பதப்படுத்தல் பொறியியல்  வேளாண் உயிரித் தொழில்நுட்பம், தோட்டக்கலை, சக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உயிரித் தகவலியல், வேளாண் தகவல் தொழில்நுட்பம், பிஎஸ் வேளாண் தொழில் வேளாண்மை ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. 

                  விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் பல்கலை. இணையதளத்தில் http://www.tnau.ac.in/ugcoun10/index.html வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கவுன்சலிங் ஜூன் 16-ம் தேதி பல்கலை. வளாகத்தில் துவங்குகிறது.    முதல் கட்ட கவுன்சலிங்கில் 1,561 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தகவல் கடிதம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் தரவரிசைப் பட்டியலின்படி குறிப்பிட்ட நாள்களில் கவுன்சலிங்கில் பங்கேற்கலாம். 

கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சலிங் நடைபெறும் தேதி விவரம்:

                    ஜூன் 16 காலை 9.30 - 198.25 முதல் 189.50 வரை; மாலை 1.30 - 189.25 முதல் 185.50 வரை.ஜூன் 17 காலை 9.30 - 185.25 முதல் 182.50 வரை; மாலை 1.30 - 182.25 முதல் 179.75 வரைஜூன் 18 காலை 9.30 - 179.50 முதல் 177.25 வரை; மாலை 1.30 177 முதல் 175 வரை.ஜூன் 19 காலை 9.30 - 174.75 முதல் 172.50 வரை; மாலை 1.30 172.25 முதல் 170 வரை.ஜூன் 20 காலை 9.30 - 169.75 முதல் 167.50 வரை; மாலை 1.30 167.25 முதல் 165.25 வரை. கோவை வேளாண் கல்லூரி முதல்வர் க.வணங்காமுடி இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior