பண்ருட்டி :
பண்ருட்டியில் போலி டாக்டர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் நிப்பேன்ராய் (40). இவர் கடந்த 12 ஆண்டுகளாக பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் ராய் என்ற பெயரில் கிளினிக் நடத்தி மூலம், பவுத்திரம் உள்ளிட்ட வியாதிகளுக்கு மருத்துவம் அளித்து வந்தார். பண்ருட்டியைச் சேர்ந்தவர் நீலமேகம் (43). இவர் கும்பகோணம் சாலையில் 3 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி அலோபதி முறையில் மருத்துவம் செய்தார் .இருவரும் போலி டாக்டர்கள் என சுகாதாரத் துறைக்கு புகார் தெரிவித்ததன் பேரில் சுகாதாரத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பண்ருட்டி போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து பண்ருட்டி இன்ஸ்பெக்டர் செல்வம் இருவரிடமும் விசாரணை மேற்கொண் டதில் நிப்பேன்ராய் பி.ஏ., முதலாம் ஆண்டு வரையும், நீலமேகம் பத்தாம் வகுப்பு வரையும் படித்திருப்பது தெரியவந்தது. பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து நிப்பேன் ராய், நீலமேகம் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த சான்றிதழ்களை பறிமுதல் செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக