தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்களுக்கு சனிக்கிழமை (ஜூன் 12) காலை 11 மணிக்கு ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு, மதுரை, சேலம், கோவை உள்பட 15 அரசு மருத்துவக் கல்லூரிகளின் 1,483 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் ரேங்க் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிடுகிறார். அமைச்சர் வெளியிட்டவுடன், இதே அலுவலக வளாகத்தில் பொது மக்கள் பார்வையிட வசதியாக ரேங்க் பட்டியல் ஒட்டப்படும். சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org மூலம் ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக