உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 16, 2010

உளுந்தூர்பேட்டை அடுத்த பரிக்கல் கோவில் உண்டியல்கள் திறப்பு காணிக்கையில் 100 ரூபாய் கள்ள நோட்டு


உளுந்தூர்பேட்டை : 

            பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது.  

             உளுந்தூர்பேட்டை அடுத்த பரிக்கல் கிராமத்தில் உள்ள லஷ்மி நரசிம்மர் கோவிலில் உள்ள 3 உண்டியல்கள் நேற்று காலை திறக்கப்பட்டது. குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஆன்மிக அன்பர்கள் உண்டியல் காணிக்கையை எண்ணினர். அப்போது 100 ரூபாய் (எண்: டிஎல்ஓ 738148) கள்ளநோட்டு ஒன்றும், ஸாம்பியா நாட்டின் குவாச்சா நோட்டும், சிங்கப்பூர், அமெரிக்க நாட்டின் டாலர் நோட்டுகளும் இருந்தன. உண்டியலில் மொத்தம் 6 லட்சத்து 68 ஆயிரத்து 307 ரூபாய் இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி உண்டியல் எண்ணும் போது 6 லட்சத்து 34 ஆயிரத்து 100 ரூபாய் இருந்தது. கோவில் ஆய்வாளர் சுரேஷ், செயல்அலுவலர் பத்ராசலம் உடனிருந்தனர். 

              உண்டியல் திருட்டில் நடவடிக்கை இல்லை கடந்த 9ம் தேதி இரவு 10 மணிக்கு இதே ஊரைச்சேர்ந்த இரு சிறுவர்கள் கோவிலுக்குள் புகுந்து சூயிங்கம் மற்றும் காந்தம் மூலம் உண்டியலில் பணம் திருடியபோது ஊர் மக்கள் கையும் களவுமாக பிடித்து திருநாவலூர் போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறினர். இது குறித்து திருநாவலூர் போலீசாரிடம் கேட்டபோது திருட்டு சம்மந்தமான புகார் எங்களுக்கு வரவில்லை என்றனர். கோவில் செயல் அலுவலர் பத்ராசலம் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior