உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 16, 2010

பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணிஅறநிலையத்துறை உதவி ஆணையர் ஆய்வு

பண்ருட்டி : 

              கோர்ட் தடை உத்தரவினால் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஓதுவார் உள் ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என அறநிலையத்துறை உதவி ஆணையர் கூறினார்.

பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணிகளை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகன்நாதன்  கூறியதாவது: 

                 திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணி 4 ஆண்டிற்கு முன் துவங்கப்பட்டது. திருப்பணியை அரசு மானியம் 8.5 லட்சம் மற்றும் உபயதாரர் சார்பில் 26.5 லட்சம் என மொத்தம் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் செய்ய திட்டமிடப்பட்டது. இதில் அரசு சார்பிலான பணிகள் முழுவதும் முடிவடைந்துள்ளது. உபயதாரர் பணிகளில் 50 சதவீதம் நடைபெற வேண்டியுள்ளது. 9 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் செய்யும் பணி மேற்கொண்டு இரண்டாண்டு ஆகியும் பணியை முடிக்காமல் தாமதப்படுத்தி வருவதால் ஒப்பந் தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

              கோவில் நிர்வாக சீர்கேடுகள் குறித்து இறைபணி மன்றத்தினர் போராட்டம் நடைபெறுவது குறித்து வருவாய்துறையினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். தற்போது மாவட்டத்தில் மொத்தம் உள்ள 23 செயல் அலுவலர் பணியிடங்களில் 15 இடங்கள் காலியாக உள்ளதால் தற்போது இக்கோவிலுக்கு தனியாக செயல் அலுவலர் நியமிக்க முடியாது. கோர்ட் தடை உத்தரவால் ஓதுவார், பரிச்சாரகர், சுயம்பாகர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior