உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 16, 2010

வீராணம் திட்ட பாலத்தின் கீழ் மெகா பள்ளங்கள் மூடப்பட்டன


சேத்தியாத்தோப்பு : 

              சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் புதிய வீராணம் திட்ட பாலத்தின் கீழ் தோண்டிய பள்ளங்கள் தினமலர் செய்தி எதிரொலியால் சமப்படுத்தப்பட்டு வருகிறது.

             தமிழகத்தின் தலைநகரான சென்னை மக்களின் குடிநீர் தேவைக் காக உருவாக்கப்பட்ட புதிய வீராணம் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் பில்லர் அமைத்து அதன் மீது மெகா சைஸ் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.வெள்ளாற்றில் அரசு அமைத் துள்ள மணல் குவாரியில் பாலத்தின் அருகிலேயே மணல் எடுப்பதால் பில்லர்கள் பலவீனமடைந்து தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது. 

             இதுகுறித்து கடந்த 12ம் தேதி தினமலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் புதிய வீராணம் திட்ட பாலத்தையொட்டி மணல் எடுத்ததால் ஏற்பட்ட மெகா பள்ளங்களையும், பாலத்திற்கு கிழக்குப் பகுதியில் 300 மீட்டர் தூரத்திற்கு சமப்படுத்தும் பணியை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர். தற்போது மணல் எடுக்கும் பகுதிக்கு அருகில் மிகப்பெரிய மண்மேடு உள்ளது. வெள்ள காலங்களில் கூட 35 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தால் தான் அந்த மண்மேடு மூழ்கும். இதனை கரைப்பதன் மூலம் சேத்தியாத்தோப்பு பகுதியில் வெள்ள பாதிப்பை தடுக்க முடியும் என்பதால் அந்த மண் மேட்டை அகற்றி, அங்கிருந்து மணல் எடுக்க மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை பொதுப்பணித்துறையினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior