உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 16, 2010

சுயநிதி எம்.பி.பி.எஸ். முதல் தலைமுறை மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் சலுகை

                சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்தில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.1.25 லட்சத்தை தள்ளுபடி செய்யுமாறு நீதிபதி பாலசுப்பிரமணியன் குழு உத்தரவிட்டுள்ளது.  

              தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு ஆண்டு எம்.பி.பி.எஸ். கட்டணம் ரூ.2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 17,610 விண்ணப்பங்களில், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் (முதல் தலைமுறை) சலுகையைப் பெறும் வகையில் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 6,440. இத்தகையோர் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்தில் சேரும் நிலையில், ஆண்டுக் கட்டணம் ரூ.2.5 லட்சத்தில் ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.1.25 லட்சத்தைச் செலுத்தத் தேவையில்லை. ஆக, எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.1.25 லட்சம் மட்டும் முதல் தலைமுறை மாணவர்கள் செலுத்தினால் போதும். இத்தகைய மாணவர்களுக்கு அளிக்கப்படும் ரூ.1.25 லட்சம் சலுகையை, சுயநிதி கல்லூரி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அளித்து விடும்.பி.டி.எஸ். படிப்புக்கு ரூ.40 ஆயிரம் சலுகை: சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடத்தில் முதல் தலைமுறை மாணவர்கள் சேரும் நிலையில், ஆண்டுக் கட்டணம் ரூ.82 ஆயிரத்துக்குப் பதிலாக ரூ.42 ஆயிரம் மட்டும் செலுத்தினால் போதும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior