பண்ருட்டி:
மரவள்ளிப் பயிர் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து குறிஞ்சிப்பாடி தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெ.மல்லிகா விளக்கியுள்ளார்.
குறிஞ்சிப்பாடி தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜெ.மல்லிகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அண்ணாகிராமம் வட்டார பகுதியில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இதில் மாவுப்பூச்சி, வெள்ளை ஈ தாக்குதல் காரணமாக இலைகள் மஞ்சள் நிறமாகி பழுத்து காய்ந்து விடுகிறது. இது போன்ற அறிகுறி அதிக இடத்தில் தென்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த டிரை அசோபாஸ் (2 மிலி), பாசலோன் (2 மிலி), புரேபினோபாஸ் 50 இசி (2 மிலி), டைமெத்தோயேட் 30 இசி (2 மிலி), குளோர்பைரிபாஸ் 20 இசி (4 மிலி) (அடைப்பு குறியில் உள்ளது ஒரு லிட்டர் தண்ணீருக்கு) இதில் ஏதேனும் ஒரு மருத்துடன், வேப்ப எண்ணெய் (5 மிலி) கலந்து இலையின் அடிப்பாகம் நனையும் வரை 10 நாள்கள் இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும். மாவுப்பூச்சி மட்டும் தென்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீரில் வேப்ப எண்ணெய் 20 மிலி மற்றும் 5 மிலி சோப்பு கரைசல் கலந்து இலையின் அடிப்பாகம் நனையும்படி தெளிக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக