உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 16, 2010

பல்கலைக்கழகங்களில் தமிழில் பட்டமளிப்பு விழா: அமைச்சர் க.பொன்முடி


          தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழா நடைமுறைகள் இனி தமிழ் வழியில் பின்பற்றப்படும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். 
 
கோவையில்  மிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி வியாழக்கிழமை கூறியது: 
 
            பல்கலைக்கழகங்களில் இதுவரை ஆங்கிலத்தின்தான் பட்டமளிப்பு விழா நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. தமிழில் இந்த நடைமுறைகள் இருப்பதே பொருத்தமாக இருக்கும். நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே தமிழ் வழியில் பட்டமளிப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. தற்போது வேளாண் பல்கலை.யிலும் அதைத் தொடர்ந்து பாரதியார் பல்கலை.யிலும் இதேநடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலை.களிலும் பட்டமளிப்பு நடைமுறைகள் தமிழில் இருக்கும். பொறியியல் கல்வியில் இந்த ஆண்டில் தமிழ் வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இயந்திரவியல், கட்டடவியல் துறைகளில் மட்டுமே தமிழ் வழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். இதுவரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் வழியில் சேர்ந்துள்ளனர். வரும் ஆண்டுகளில் பிற பொறியியல் பாடங்களிலும் தமிழ் வழிக் கல்வி அறிமுகம் செய்யப்படும். பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சலிங்கில் போலிச் சான்றிதழ் சமர்ப்பித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 45 பேர் அவ்வாறு சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளனர். ஆகவே, சான்றிதழ்கள் சரிப்பார்ப்பு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior