உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 14, 2010

"108 ஆம்புலன்ஸ் சேவை: 5.70 லட்சம் பேர் பயன்"

கடலூர்:

              தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள "108' ஆம்புலனஸ் சேவை மூலம் இதுவரை 5.70 லட்சம் பேர் பயன் அடைந்து உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கடலூரை அடுத்த திருவந்திபுரம் மற்றும் காரைக்காடு ஆரம்ப சுகாதார நிலைங்களில் 30 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டடங்களை புதன்கிழமை இரவு திறந்து வைத்து அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியது:

               தமிழ்நாட்டில் தற்போது "108' ஆம்பிலன்ஸ் சேவை வாகனங்கள் 385 செயல்படுகின்றன. மேலும் 200 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வர இருக்கின்றன. இத்திட்டத்தில் இதுவரை 5.70 லட்சம் பேர் பலன் அடைந்து உள்ளனர். இத்திட்டம் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உருவாக்கிய திட்டம் அல்ல. முதல்வர் கலைஞரின் திட்டம் இது.

                  மத்திய அரசு பல்வேறு மருத்துவத் திட்டங்களுக்கு நிதி வழங்குகிறது. அந்த நிதியில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் "108' ஆம்புலனஸ் சேவை திட்டமும் ஒன்று. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு, 1,000 கோடியில் புதிய கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. கடலூர் அரசு மருத்துவமனையில் 1.75 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர்.அமைச்சர் பன்னீர்செல்வம், 

                காரைக்காடு, சஞ்சீவிராயன் கோயில் ஆகிய ஊர்களில் புதிய ரேஷன் கடைகளைத் திறந்து வைத்தார். சி.என்.பாளையத்தில் 1.28 கோடியில் கட்டப்பட்ட பாலத்தையும், அரசு மேல்நிலைப் பள்ளியையும் திறந்து வைத்தார்.  ராமாபுரத்தில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளையும் அமைச்சர் வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior