கடலூர்:
கடலூர் பெண்ணையாற்றங்கரையில் கொலை செய்து முகம் எரிக்கப்பட்ட வாலிபர் யார் என்பது குறித்து துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்
.
.
கடலூர் பெண்ணையாற்றங்கரையில் நேற்று முன்தினம் 25 வயது மதிக் கத்தக்க வாலிபரின் உடல் முகம் மற்றும் மார்பு பகுதி எரிந்த நிலையில் கிடந்தது. இறந்தவரின் தலை மற்றும் உடலில் பல இடங்களில் கத்தி வெட்டுக் காயங்கள் உள்ளன. கொலை செய்யப்பட்ட நபர் அடையாளம் தெரியக்கூடாது என்பதற் காக முகத்தை எரித்துள்ளது தெரியவந்துள்ளது. கொலையான நபர் கைலியும், வெள்ளை நிற சட்டையும் அணித்திருந்தார்.
தகவலறிந்த கூடுதல் எஸ்.பி., ராமகிருஷ்ணன், டி.எஸ்.பி., மகேஷ்வரன், இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, சுந்தரவடிவேல், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற் குச் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலை செய்யப்பட்ட நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்டவரை எவரேனும் கடத்தி வந்து கொலை செய்து ஆற்றங்கரையில் போட்டு எரித்திருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரில் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் எவரேனும் காணாமல் போயுள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இருப்பினும் கொலையான நபர் யார் என்பது குறித்து தெரியாமல் எவ்வித துப்பும் கிடைக்காமல் திணறி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக