குறிஞ்சிப்பாடி:
குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவிலில் ஆடி செடல் திருவிழாவில் இலங்கை அகதிகள் ஊஞ்சல் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் உள்ள புத்துமாரியம்மன் கோவிலில் நேற்று ஆடி வெள்ளியில் செடல் விழா நடந்தது. கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் சுவாமி பல் வேறு அலங்காரத்தில் வீதியுலாவும், சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. 9ம் நாள் திருவிழாவாக செடல் விழா நடந்தது. விழாவில் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் ஊஞ்சல் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத் தினர். இன்று நடைபெறும் தேரோட்டத்தை அமைச்சர் பன்னீர்செல்வம் வடம் பிடித்து துவக்கி வைக்கிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக