பரங்கிப்பேட்டை,:
முதன்மைக் கல்வி அதிகாரியை வரவேற்பதற்காக, மாணவியர் கடும் வெயிலில் காத்திருந்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சாமியார்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் 10 மற் றும் பிளஸ் 2 பொதுத் தேர் வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நாகார்ஜுனா பவுண்டேஷன் சார்பில் நேற்று பரிசு வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டுவதற்காக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி அழைக்கப் பட்டிருந்தார்.
காலை 10 மணிக்கு வருவதாக இருந்த அவரை வரவேற்க மாணவியர், பள்ளி நுழைவாயிலில் வரிசையாக நிறுத்தப்பட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலணி கூட அணியாமல் நிற்க வைக்கப்பட்டிருந்தனர். சுடுமணலில் நிற்க முடியாமல் மாணவியர் அவதிக்குள்ளாயினர்.
ஒரு வழியாக 11 மணிக்கு வந்த முதன்மைக் கல்வி அதிகாரியை வரவேற்ற பின், "சீட்'டில் உட்காரச் செல்ல முயன்ற மாணவியரிடம், விழா முடியும் வரை நிற்க வேண்டும் என ஆசிரியர்கள் கட்டளையிட்டனர். மர நிழலில் நின்று ஓய்வெடுத்த பின், மீண்டும் 12 மணிக்கு விழா முடியும் வரை நிற்க முடியாமல் அவதியுடன் மாணவியர் நின்றிருந்தது பரிதாபமாக இருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக