உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 14, 2010

மாணவ, மாணவிகள் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்: எம்.எல்.ஏ. அய்யப்பன்

கடலூர்:

             மாணவ, மாணவிகள் திட்டமிட்டு படித்து குடும் பத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண் டும் என எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.

               கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பேச் சுக்கலைப் பயிலரங்கம் மற்றும் செம்மொழி தமிழ் இலக்கிய மன்றத் துவக்க விழா நடந்தது. தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் அர்த்தநாரி வரவேற்றார். தமிழ்த் துறைத் தலைவர் தமிழாழி கொற்கை வேந்தன் தலைமை தாங்கினார். கல் லூரி முதல்வர் (பொறுப்பு) ரங்கநாதன் துவக்கி வைத்தார். புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்டமேற் படிப்பு மைய இணைப் பேராசிரியர் இளங்கோ பேச்சுக் கலை பயிற்சி வழங்கினார். 

எம்.எல்.ஏ., அய்யப்பன் செம்மொழி தமிழ் அறக்கட்டளை சார்பில் தொடர் வைப்பு நிதியாக ஒரு லட்சம் ரூபாயை கல் லூரிக்கு வழங்கிப் பேசுகையில், 

                   "உலகத் தமிழர்களின் ஒரே தலைவர் கருணாநிதி. ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயர, வறுமையில்லா தமிழகத்தை உருவாக்க ஓய் வின்றி உழைக்கிறார். துணை முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக இயங்கி எங்களை மக்கள் பணியில் ஈடுபட ஆலோசனை வழங்கி வருகிறார்.

              அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி, விளையாட்டு, அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்க கல்வித் துறை கூடுதல் நிதி ஒதுக்கி மிகுந்த அக்கறையுடன் இரண்டு அமைச்சர்களை நியமித்து பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆரம்பக் கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கி முதல்வர் சாதனை படைத்து வருகிறார்.

            கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தொடர் வைப்பு நிதியிலிருந்து வரும் வட்டி மூலம் தமிழில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். மாணவ, மாணவிகள் திட்டமிட்டு படித்து முன்னேறி பெருமை சேர்க்க வேண்டும்' என பேசினார். இதேப்போன்று செம்மொழி தமிழ் அறக்கட்டளை சார்பில் தொடர் வைப்பு நிதியாக கடலூர் துறைமுகம் புனித பிலோமினாள் உயர் நிலைப் பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தலா ஒரு லட் சம் ரூபாயை எம்.எல்.ஏ., அய்யப்பன் வழங்கியுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior