உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 14, 2010

விதை நெல்லுக்கு மானியம் இல்லை: கடலூர் மாவட்ட விவசாயிகள் அவதி


சிதம்பரம்:
 
                   தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் விதை நெல்லுக்கு மானியம் வழங்கப்படாததால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
 
               காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் விரிவாக்க மையங்களில் சம்பா சாகுபடிக்கான விதைநெல் இருப்பு வைக்கப்பட்டு வழங்கப்படுவதாக வேளாண்துறை அறிவித்துள்ளது. விரிவாக்க மையங்களில் மட்டும் விதைநெல் வழங்கப்பட்டபோது தவறுகள் நடைபெற்றதால் தற்போது அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகள் விதை நெல் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
          இந்நிலையில் விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் ஒரு கிலோ விதை |27. இதற்கு அரசு மானியம் கிலோவிற்கு |5 வழங்குகிறது. ஆனால் விவசாயிகள் விதை நெல்லை பெறச் சென்றபோது அரசு வழங்கும் மானியத் தொகை வழங்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் ஞானவிநாயகர் கோயில், எடையூர், செட்டித்தாங்கல், பிள்ளையார்தாங்கல், அதங்குடி, ரெட்டியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் விதை நெல்லுக்கான மானியம் வழங்கப்படுவதில்லை என தெரிவித்துள்ளனர்.
 
            ""உதவி வேளாண் இயக்குநர் எங்களுக்கு உத்தரவு வழங்காததால் மானியத்தை வழங்க முடியவில்லை. உத்தரவு கிடைத்தவுடன் அத்தொகையை கழித்துக்கொள்வோம்'' என கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்கள் தெரிவிக்கின்றனர். ""அதேபோன்று ஒவ்வொரு விவசாயிக்கும் 5 மூட்டை டிஏபி உரம் வழங்க வேண்டும் என உத்தரவு உள்ளது. ஆனால் விவசாயி ஒருவருக்கு ஒரு மூட்டைதான் உரம் வழங்கப்படுகிறது. 
 
               இது தனியார் உர வியாபாரிகளை ஊக்குவிப்பதாகவே இருக்கிறது. எனவே விவசாயிகளுக்கு தாராளமாக உரங்களை வழங்கவும், விதை நெல்லுக்கான மானியத்தை கழித்து பணத்தை பெற்றுக்கொள்ளவும் கடலூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் நாரைக்கால் ஏரிப்பாசன விவசாய சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் கேட்டுக் கொண்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior