உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 14, 2010

சுனாமி பாதித்த கிள்ளை பகுதியில் குறைந்த மின் அழுத்தம்

சிதம்பரம்:

              குறைந்த மின் அழுத்தம் காரணமாக, சுனாமியால் பாதிக்கப்பட்ட கிள்ளை பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

              கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கிள்ளை பேரூராட்சி சுனாமி மற்றும் நிஷா புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாகும். இங்கு உலகப் புகழ் பெற்ற சுற்றுலா மையமான சுரபுண்ணை காடுகள் அடங்கிய பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. பேரூராட்சி பகுதியில் 26-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் பிச்சாவரம் சுற்றுலா மையம் செல்லும் சாலை, தைக்கால், சிங்காரகுப்பம், சி.மானம்பாடி, பொன்னந்திட்டு, கூழையார் மற்றும் முடசல்ஓடை பகுதிகளில் பல ஆண்டுகளாக குறைந்த மின்அழுத்தத்தினால் தெரு விளக்குகள் எரிவதில்லை. வீடுகளில் இரவில் குண்டுபல்புகள்தான் எரியும் நிலை உள்ளது.

இதுகுறித்து கிள்ளை பேரூராட்சித் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் கூறியது:

             கிள்ளை பேரூராட்சியில் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுனாமி குடியிருப்புகள் கட்டப்பட்டு மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது. மேலும் 14-க்கும் மேற்பட்ட சமுதாயக் கூடங்கள் உள்ளன. சுயஉதவிக் குழுக்களால் நடத்தப்படும் கைமுறை காகித ஆலை, தனியாரால் நடத்தப்படும் இதர ஆலைகளும் உள்ளன. இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மின்சார ஓயர்கள் மாற்றப்படாமல் உள்ளதால் மின்சாரம் அதிக அளவில் வீணாகிறது. இதனால் குறைந்த மின்அழுத்தமே கிடைக்கிறது. 

                இதனால் தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதுடன் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்படுகிறது. அடிக்கடி மின்மோட்டார் பழுதடைந்து பேரூராட்சிக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. கிள்ளை பேரூராட்சி மூலம் மாதம் |2 லட்சம் மின்கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. எனவே குறைந்த மின் அழுத்தத்தைப் போக்க கிள்ளை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மின்சார ஓயர்களை மாற்றி, புதிய மின்மாற்றி அமைத்து மின்அழுத்தத்தை சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் எஸ்.ரவிச்சந்திரன்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior