கடலூர்:
டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினர் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
பணி நிரந்தரம் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் கடந்த 11ம் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் பணியாற்றி வந்த அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 9 மேற்பார்வையாளர்கள், 15 விற்பனையாளர்கள் நேற்று முன் தினம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் அந்த உத்தரவை ரத்து செய்து, கடலூர் தலைமை அலுவலகத்திற்கு இடமாற் றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பி க்கப்பட்டது.
இதனை அறிந்த அண்ணா தொழிற்சங்க கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ் ணன், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகுமாறன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று மாலை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தேவராஜூலுவைச் சந்தித்து மனு கொடுத்தனர். அதில், விதிப்படி போராட்டத்தில் ஈடுபடும் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் அண்ணா தொழிற்சங்கத்தினரை மட்டும் தற்காலிக பணிநீக்கம் செய்ததோடு, அவர்களை தற்போது கடலூரில் உள்ள தலைமையிடத்திற்கு மாற்றம் செய்திருப்பது கோர்ட் உத்தரவை மீறிய செயலாகும்.
இதனை ரத்து செய்துவிட்டு அவர்கள் ஏற்கனவே பணி செய்த இடத்திலேயே பணியில் அமர்த்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், கோரிக்கையை ஏற்காவிட்டால் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரித்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும், அனைவரையும் கடலூர் தலைமையிடத்தில் பணியில் சேருமாறு மாவட்ட மேலாளர் தேவராஜூலு கூறினார். அதனை ஏற்க மறுத்த டாஸ்மாக் பணியாளர்கள் பணியில் சேராமல் வெளியேறினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக