உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 16, 2010

ரேஷன் மளிகை பொருள்களின் விலை ரூ. 25


            தமிழக ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் மளிகைப் பொருள்களின் அளவும், விலையும் குறைக்கப்பட்டுள்ளது. 10 மளிகைப் பொருள்கள் உள்ள இந்த பாக்கெட்டின் விலை இப்போது ரூ. 25-க்கு விற்கப்படுகிறது.
 
             தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன் கடைகளிலும் மானிய விலையில் ரூ. 50-க்கு மிளகாய் தூள், கடுகு, மிளகு, சீரகம் உள்ளிட்ட 10 மளிகைப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆகஸ்ட் மாதத்துக்கு, மானிய விலையில்  வழங்கப்படும் 10 மளிகைப் பொருள்கள் உள்ள பாக்கெட்டின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாக்கெட்டின் மீது "சொன்னதைச் செய்வோம் சொல்வதைச் செய்வோம்' என்ற வாசகங்களுடன் முதல்வர் கருணாநிதியின் படம் அச்சிடப்பட்டுள்ளது. 
 
            ஒரு பெண் அஞ்சலைப் பெட்டியில் இருந்து மளிகைப் பொருள்களை எடுத்து வாணலியில் சமைப்பது போன்ற வண்ணப் படத்துடன் பத்துப் பொருள்கள் ரூ. 25 என்றும் அந்தப் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ளது.÷கடந்த மாதம் வரை ரூ. 50-க்கு விற்கப்பட்ட, மளிகைப் பொருள் பாக்கெட்டின் விலை இப்போது குறைக்கப்பட்டுள்ளதே என மகிழ்ச்சியுடன் வாங்கினர். ஆனால், இந்தப் பாக்கெட்டில் உள்ள 10 மளிகைப் பொருள்களின் அளவும் குறைக்கப்பட்டுள்ளதை அறிந்து பெண்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு குடும்ப அட்டைதாரருக்கு தலா ஒரு மளிகைப் பொருள் பாக்கெட் மட்டுமே ரேஷனில் வழங்கப்படுகிறது
 
             .இதில் உள்ள மளிகைப் பொருள்களின் எடையளவு கிராமில் (அடைப்புக் குறிக்குள் இவற்றின் பழைய எடையளவு) விவரம்: மஞ்சள் தூள் 50 (50), மிளகாய் தூள் 100 (250), மல்லித்தூள் 50 (250), கடலைப் பருப்பு 50 (75), உளுத்தம்பருப்பு 25 (50). வெந்தயம் 25 (25), கடுகு 25 (25), மிளகு 25 (25), சீரகம் 50 (50), கரம் மசாலா தூள் 10 (10) முன்பு இந்த மளிகைப் பொருள் பாக்கெட்டுகள் கீழ்ப்பாக்கம் தம்புசாமி சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் தயாரித்து விநியோகிக்கப்பட்டு வந்தது.  ஆனால், இப்போது மளிகைப் பாக்கெட்டுகள் வியாசர்பாடியில் உள்ள தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, நுகர்பொருள் வாணிபக் கழகம் விநியோகிப்பதாகத் தெரியவந்துள்ளது.
 
                       இதில் கடுகு, சீரகம், வெந்தயம் உள்ளிட்ட பொருள்கள் உள்ள பாக்கெட்டுகளில் அரசு முத்திரை மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை தனியார் மசாலா நிறுவனத் தயாரிப்பாக இந்தப் பொருள்கள் வழங்கப்பட்டு வந்தன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior