உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 16, 2010

நிலக்கரியை இறக்குமதி செய்ய என்எல்சி திட்டம்: அன்சாரி


நெய்வேலி:
 
           என்எல்சியின் புதிய அனல்மின் திட்டங்களுக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக அதன் தலைவர் ஏ.ஆர்.அன்சாரி  நெய்வேலியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் குறிப்பிட்டார்.
 
            என்எல்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவுக்கு நிர்வாகத் துறை இயக்குநர் பி.பாபுராவ் தலைமை வகித்தார். விழாவில் பங்கேற்ற நிறுவனத் தலைவர் ஏ.ஆர்.அன்சாரி நெய்வேலி விருந்தினர் மாளிகை எதிரே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
பின்னர் பாரதி விளையாட்டரங்கில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து அவர் பேசியது: 
 
              நாட்டின் நிலக்கரித் தேவை, உற்பத்தியைக் காட்டிலும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மின்சக்தியின் தேவையும் நாளுக்குநாள் அதிகரித்துவரும் வேளையில், மின்துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே என்எல்சியின் விரிவாக்கத் திட்டங்களுக்குத் தேவையான நிலக்கரியைப் பெறும் வகையில் நீண்டகால ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அவசியமாகிறது.
 
                 தடங்கல் இன்றி எரிபொருள் வழங்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டும். இதற்காக தகுதியான நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் வெளிநாடுகளில் சுரங்கம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும்.
 
             இந் நோக்கத்துடன் என்எல்சி ஏற்கெனவே சில பூர்வாங்க பணிகளை மேற்கொண்டுள்ளது. அவற்றுக்கு இந்திய அரசின் அனுமதியைப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்றார் அன்சாரி.தொடர்ந்து நிறுவனத்தில் நீண்டகாலம் பணியாற்றிய தொழிலாளியை கௌரவித்தல், 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குதல், விளையாட்டுகளில் பதக்கம் வென்ற மாணவ, மாணவியரை கௌரவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நெய்வேலி பள்ளிகளின் மாணவ, மாணவியர் பங்கேற்ற வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
 
                  இக்கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு |3.5 லட்சம் வெகுமதியாக வழங்கப்படும் என அன்சாரி அறிவித்தார்.நிகழ்ச்சியில் நிறுவன இயக்குநர்கள் பி.சுரேந்திரமோகன், ஆர்.கந்தசாமி, கே.சேகர், ஜே.மகிழ்செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior