கடலூர்:
பாரதிதாசன் நற்பணி மன்றம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கவிதைத் திருவிழா நடத்தப்பட்டது.
கடலூர் புதுப்பாளையம் துர்கா பயிற்சிப் பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு மன்றத் தலைவர் கடல் நாகராஜன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் செந் தில் முருகன் முன்னிலை வகித்தார். செயலாளர் மூர்த்தி வரவேற்றார். 63ம் ஆண்டு சுதந்திர தினம் சாதனைகள் நிறைந்ததா? சோதனைகள் நிறைந்ததா என்ற தலைப்பில் நடந்த கவிதைப் பேட்டியில் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த 75 கவிஞர்கள் பங்கேற்றனர்.
அவர்களில் புதுச்சேரி ஞானகுமரன், ஆறுமுகம், ராஜராஜேஸ்வரி, பு.முட் லூர் தமிழ்செல்வன் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதி நாகரத்தினம் தபாலில் அனுப்பிய கவிதை ஆறுதல் பரிசு பெற்றது. கூட்டுறவுத் துறைத் தனி அலுவலர் ஞானபாரதி பரிசு பெற்றார். உபேந்திரன், பாரதிவாணர் சிவா வாழ்த்துரை வழங்கினர். சாந்தி பிரியா நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக