உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 16, 2010

கடலூர் அருகே கோயில் விழாவில் கலவரம்

கடலூர்:
 
              கடலூர் அருகே மாவடிப்பாளையம் கிராமத்தில் கோயில் விழா தொடர்பாக சனிக்கிழமை நிகழ்ந்த கலவரத்தில் மூதாட்டி கொல்லப்பட்டார். 14 பேர் காயம் அடைந்தனர். வீடுகள் சூறையாடப்பட்டன. 
 
                  மாவடிப்பாளையம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை செடல் உற்சவம் நடந்தது. இதில் மேளதாளம் முழங்க  சுவாமி வீதிஉலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோயில் விழா நிகழ்ச்சிகளில் பேண்டு வாத்திய இசைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று, அக் கிராமத்தைச் சேர்ந்த ராசு, நடராஜன், சிவகாண்டீபன் உள்ளிட்ட சிலர் கோயிலை நிர்வகிக்கும் பெரியவர்களிடம் தெரிவித்தனர்.
 
              அதற்கு பெரியவர்கள் பேண்டு வாத்தியம் போன்ற இசை நிகழ்ச்சிகளை கோயில் விழாக்களில் நடத்தக் கூடாது என்று தெரிவித்து விட்டனராம். இதனால் அக்கிராமத்தில் இரு கோஷ்டிகளுக்கு இடையே விரோதம் ஏற்பட்டது. சனிக்கிழமை காலை ஒரு கோஷ்டியின் தூண்டுதலால், டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் கத்தி, தடி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மாவடிப்பாளையம் கிராமத்துக்குள் நுழைந்தனர்.
 
              அவர்கள் கிராமத்தில் கண்ணில் பட்ட நபர்களை எல்லாம், சரமாரியாகத் தாக்கினர். இரு சக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. வீடுகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். சில வீடுகள் சூறையாடப்பட்டன.÷இந்த கலவரத்தில் சமரசம் பேச முயன்ற மாவடிப்பாளையம் ஜெயலட்சுமி (70), ஞானசேகரன் (27), சுந்தரக் கண்ணன் (20), ஜெகந்நாதன் (50), சின்னத்தம்பி (47), கணபதி (40), வேணு (42), கதிர்வேலு (38), குணசுந்தரி (38), பழநிச்சாமி (32), உள்ளிட்ட 15 பேர் பலத்தக் காயம் அடைந்தனர்.
 
              காயம் அடைந்த அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூதாட்டி ஜெயலட்சுமி இறந்தார். தகவல் அறிந்ததும் கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் போலீஸôர் விரைந்து சென்று, மாவடிப்பாளையம் கிராமத்தில் மேற்கொண்டு கலவரம் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.  இச்சம்பவத்தால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலை தனிப்படை போலீஸôர் தேடிவருகிறார்கள்.  திருப்பாப்புலியூர் போலீஸர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior