கடலூர்:
கடலூர் மாவட்டக் காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த, மாவட்ட போலீஸ் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ரத்தினவேல் உள்ளிட்ட 25 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை நடந்த சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
உதவி ஆய்வாளர் ரத்தினவேலுக்கு ஜனாதிபதி விருது சனிக்கிழமை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விருது சென்னையில் காவல்துறை சார்பில் நடைபெற இருக்கும் விழாவில் தமிழக ஆளுநரால் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதற்கிடையே கடலூர் மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்ததற்காக அவருக்கு சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். அவருடன் சிறப்பாகப் பணிபுரிந்ததற்கான சான்றிதழ், உதவி ஆய்வாளர்கள் அமீர்ஜான், அம்பேத்கர், ஆனந்தபாபு, குருமூர்த்தி, சுந்தரராஜன், கருணாநிதி மற்றும் 11 தலைமைக் காவலர்கள், 4 முதல்நிலைக் காவலர்கள், ஒரு 2-ம் நிலைக்காவலர் மற்றும் 2 அலுவலகக் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கும் சிறப்பாகப் பணி புரிந்ததற்கான சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ரத்தினவேல் மாவட்டத் தனிப் பிரிவில் பணிபுரிந்தாலும் அவர் பண்ருட்டி புதுப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளாரக பணி நியமனம் செய்யப்பட்டவர்.
ரத்தினவேல் 1-7-1977-ல் முதல்நிலைக் காவலராக தமிழகக் காவல் துறையில் பணியில் சேர்ந்தார். 1999-ல் தலைமைக் காவலராகவும், 2005-ல் உதவி ஆய்வாளராகவும் பதவி உயர்வு பெற்றார். 1975 முதல் 3 ஆண்டுகள் சிபிசிஐடி-யில் பணிபுரிந்து உள்ளார். பணியில் பெரும்பகுதி தனிப்பிரிவில் பணியாற்றி இருக்கிறார். சிறப்பாகப் பணியாற்றியமைக்காக அவருக்கு, 2 முறை தமிழக முதல்வரின் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. ரத்தினவேல் இதுவரை தனது பணிக்காலத்தில் 1,167 நற்சான்றுகளை பெற்று இருக்கிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக