உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 16, 2010

பெண்களுக்கான புதிய மருத்துவ பரிசோதனை திட்டம் தொடங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்


        கிராமப்புற பெண்களுக்கான புதிய மருத்துவப் பரிசோதனைத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
 
சென்னை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்குச் சிறப்புக் கதிர்வீச்சு சிகிச்சையைத் துவக்கி வைத்து அமைச்சர் மேலும் பேசியது:
 
              இந்தத் திட்டத்தின்படி, பெண்களின் கருப்பை மற்றும் மார்பகப் புற்று நோய்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணமாக்கப்படும். இந்தத் திட்டம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும்.இந்தத் திட்டத்தின்படி, 50 பெண்களுக்கு ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர் வீதம் பரிசோதனைகளில் ஈடுபடுவார்கள் என்றார் அமைச்சர் பன்னீர்செல்வம்.
 
                       தரமில்லாத மருத்துவ மனைகள் மீது நடவடிக்கை:கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளின் விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்படுகின்றன. அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க மாவட்டந்தோறும் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தரமானச் சிகிச்சை அளிக்காத 79 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார் ஸ்டார் மருத்துவக் காப்பீட்டு நிறுவன மருத்துவ இயக்குனர் டாக்டர் பிரகாஷ்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior