உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 16, 2010

கடலூரில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கடலூர் : 

           சுதந்திர தின விழாவையொட்டி கடலூர் மாவட்டத்தில் 293 பேருக்கு 38 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
 
               சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நாடங்கிலும் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. நேற்று கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் சுதந்திரதின விழாவையொட்டி காலை 8.25 மணிக்கு எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் அரங்கத்திற்கு வந்து போலீஸ் அணி வகுப்பை தயார் படுத்தினார். 8.27 மணிக்கு கலெக்டர் சீத்தாராமன் வருகை தந்தார். அவரை எஸ்.பி., வரவேற்று கொடி மேடைக்கு அழைத்து வந்தார். 

                    காலை 8.30 மணிக்கு கலெக்டர் சீத்தாராமன் தேசிய கொடி ஏற்றினார். பின்னர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதிர் வேட்டுகள் மூலம் பாராசூட்டில் இணைக்கப்பட்டிருந்த மூவர்ணக்கொடி வானத்தில் பறந்தன. மாவட்டத்தில் உள்ள 65 சுதந்திர போராட்டத் தியாகிகளுக்கு கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.மேலும், சிறப்பாக பணிபுரிந்த 7 சப் இன்ஸ்பெக்டர்கள், 16 ஏட்டுகள், 2 அமைச்சுப்பணியாளர்களுக்கு கலெக்டர் சான்றிதழ்கள் வழங்கினார்.  தொடர்ந்து 39 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். 

               சமூக நலத்துறை சார்பில் 87 பேருக்கு 17.4 லட்சம் ரூபாய், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 49 பேருக்கு 4.89 லட்ச ரூபாய், வருவாய்த்துறை சார்பில் 41 பேருக்கு 7.3 லட்சம் ரூபாய் என மொத்தம் 293 பேருக்கு 38 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.பின்னர் போலீஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி, பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சி, தீயணைப்புத் துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.விழாவில் டி.ஆர்.ஓ., நடராஜன், திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, ஊர்க்காவல் படை உதவி தளபதி ராஜேந்திரன், துணை வட்டார தளபதி ஜெயந்தி ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior