உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 22, 2010

அரசு துறைகளில் 2 லட்சம் காலி பணியிடங்கள்: வருவாய் ஊழியர் சங்க பொதுச்செயலர் பேட்டி

கடலூர் :

                 மாநில அரசு துறைகளில் இரண்டு லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தமிழ்நாடு வருவாய் ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் ராஜ்குமார் கூறினார்.

தமிழ்நாடு வருவாய் ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் ராஜ்குமார் நேற்று  கூறியதாவது:

                         அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி விட்டதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், ஒப்பந்த முறையில் பணியாற்றிய 11 ஆயிரம் பேரில் நான்காயிரம் பேர் மட்டுமே நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.  ஐகோர்ட்டில் வழக்கு போட்ட போது படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவர் என அரசு தரப் பில் கூறப்பட்டுள்ளது. வருவாய், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. மேலும், 2.2 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என துணை முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். இவற்றை பொது மக்களுக்கு விளக்க வேண்டும்.

                          தமிழகத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்களும், சார்பு நிறுவனங்களில் 6 லட்சம் பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் செயலாக்கப்பட்டு வருகிறது. இத்திட் டத்தை அரசு இலவசம் என கூறிவிட்டு, மருத்துவமனையில் அனுமதித்தவுடன் 25 சதவீத கட்டணத்தைச் செலுத்துமாறு கூறுகிறது. எனவே, கட்டணமில்லா சிகிச்சை முறையை அமல்படுத்தி, அரசு ஊழியர்களுக்கு நிபந்தனையின்றி சிகிச்சை பெற வகை செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, வரும் 28ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior