பரங்கிப்பேட்டை :
சிதம்பரம் அருகே தனியார் பள்ளி மழைநீர் சேகரிப்பு தொட் டியில், நான்கு பள்ளி சிறுவர்கள் விழுந்ததில் ஒருவர் இறந்தார்; மூவர் காயமடைந்தனர். பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக் கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அடுத்த பரங்கிப் பேட்டை கரிக்குப்பத்தில் மர் ஹபா மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. நேற்று காலை 11.30 மணிக்கு இடைவேளை நேரத் தில் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., மாணவர்கள் பள்ளியின் பின்புறம் உள்ள தோட் டத் தில் விளையாடினர். சில மாணவர்கள், மழைநீர் சேகரிப்பு தொட்டி மீது நின்று விளையாடியபோது திடீரென தொட்டியின் சிலாப் உடைந்து உள் வாங்கியது.சிலாப் மீது நின்றிருந்த எல்.கே.ஜி., மாணவர் சுதன், யு.கே.ஜி., மாணவர்கள் மகாஷி, தீபிகா, திவாகர் ஆகியோர் ஆறு அடி ஆழமுள்ள மழைநீர் தொட்டியின் உள்ளே விழுந்தனர். மாணவர்களின் அலறல் சத் தம் கேட்டு எல்.கே.ஜி., ஆசிரியை சுரேஷ்குமாரி, நான்கு மாணவர்களையும் காப்பாற்றி பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மாணவர் சுதன் இறந்தார். மற்ற மூன்று மாணவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக் கப் பட்டு வருகிறது.மாணவர் சுதன் இறந்ததால் பள்ளிக்கு விடுமுறை அறிவித்துவிட்டு, பள்ளி நிர்வாகத்தினர் தலைமறைவாகினர்.
தகவலறிந்த பெற்றோர் அலறி அடித்து ஓடி வந்து தங்கள் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.இறந்த மாணவர் சுதன், சின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆவேசத்துடன் பள்ளிக்கு சென் றனர். அவர்களை, பரங்கிப் பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சமாதானம் செய்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், மாணவர் சுதன் இறப்புக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அரசு மருத்துவமனை முன் சின்னூர் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதையேற்று மறியல் கைவிடப்பட்டது. பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
காரணம் இது தான்: பள்ளி கட்டடத்தில் இருந்து 20 அடி தூரத்தில் மழை நீர் சேகரிப்பு தொட்டி உள்ளது. பள்ளி கட்டடத்தில் விழும் மழைநீர் அங்கு செல்ல பைப் இணைப்பு எதுவும் இல்லை. தரமாகவும் கட்டவில்லை. இதனால், பள்ளி சிறுவர்கள் மேலே ஏறி விளையாடிய போது உள் வாங்கியுள்ளது. பள்ளி எதிரே விளையாட இடம் இருந்தும், பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை பள்ளிக்கு பின்னால் சென்று விளையாட கூறியதே இந்த விபத்திற்கு முக்கிய காரணம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக