சேத்தியாத்தோப்பு :
சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில் நடந்த கரும்பு விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் வெளிநடப்பு செய்தனர்.
சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளின் குறைகேட்பு கூட்டம் நடந்தது. ஆலையின் ஆட்சியர் (பொறுப்பு) கலைராஜன் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணி, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் இளங்கோ, கனகசபை முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு கரும்பு பதிவு இல்லாதது, கரும்பு துறையின் நிர்வாக சீர்கேடுகள், விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு அரை கிலோ வீதம் வழங்க வேண்டிய சர்க்கரை வழங்காதது, ஆண்டிமடம் கரும்பு கோட்ட பகுதியில் நிலவி வரும் பிரச்னைகள் குறித்து விவசாயிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் துல்லிய பண் ணையை விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாதுரை, சர்க்கரை ஆலை வளாகத்தில் கரும்பு விதைப் பண் ணையை அமைக்கவில்லை. அதிகம் கரும்பு உற்பத்தி செய்துள்ள பகுதியில் கரும்பு உதவியாளர்கள் நியமிக்கவில்லை. இவை எல்லாம் ஆலையில் தலைமை கரும்பு அலுவலர் மட்டுமே செய்ய வேண்டியவை. ஆனால் மூன்று மாதமாக நேரில் சந்தித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஒரு சில விவசாயிகள் பெற்றுள்ள தடை உத்தரவை காரணம் காட்டி ஆண்டிமடம் பகுதியில் பிற விவசாயிகளிடம் கரும்பை பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகளின் இந்த மெத் தனப்போக்கை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி கூட்டத்திலிருந்து வெளியேறினார். அவருடன் விவசாயிகள் பலரும் வெளியேறினர். தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் சங்க தலைவர்கள் ஆதிமூலம், குணசேகரன், ராமையன், தேவதாஸ் படாண்டவர், டாக்டர் பன்னீர் செல்வம், ராமானுஜம், வீரசோழன், குஞ்சிதபாதம், பாபு ஆகியோர் பேசினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக