திட்டக்குடி :
திட்டக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான இருவருக்கு நினைவுத் தூண் அமைக்க விடுதலை சிறுத்தை கட்சியினர் இடம் தேர்வு செய்துள்ளதால் பதட்டம் நிலவி வருகிறது. திட்டக்குடியில் கடந்த 1995ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் வதிஷ் டபுரம் சண்முகம், தொளார் ரமேஷ் இறந்தனர். இவர்கள் இருவருக்கும் நினைவு தூண் அமைக்க விடுதலை சிறுத்தை கட்சியினர் இளமங்கலம் கிராமத்தில் அரசு பணிமனைக்கு எதிரில் உள்ள காலி இடத்தை தேர்வு செய்தனர்.
அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அங்கு நினைவுத் தூண் அமைக்க நேற்று காலை மணல் கொட்டப்பட்டது. இதனால் பதட்டம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, டி.எஸ்.பி., இளங்கோ தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள், 8 சப்- இன்ஸ்பெக்டர்கள், 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் இன்று காலை நடைபெறவுள்ள அமைதி ஊர்வலத்திற்கு வதிஷ்டபுரம் முதல் மணல்மேடு அரசு பெண் கள் மேல்நிலைப்பள்ளி வரை செல்ல மட்டுமே போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக