கடலூர் :
ஊதிய உயர்வை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காணக்கோரி அகில இந் திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர்.இந்தியாவில் பொதுத்துறையில் ஐந்து கோடி ரூபாய் மூலதனத்தில் 1956ல் துவக்கப்பட்ட எல்.ஐ.சி., நிறுவனம் உலகின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமாக செயல்படுகிறது.
கடந்த ஆண்டு மட்டும் தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவ னங்கள் 4,899 கோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ள நிலையில் மத்திய அரசு எல்.ஐ.சி.,யை சீரழிக்க அன்னிய முதலீடு உயர்வு, இன்சூரன்ஸ் சட்ட திருத்தங்கள் முதலியவற்றை செய்ய துடித்துக் கொண்டுள்ளது.நியாயமான வளர்ச்சிக் கேற்ற ஊதிய உயர்வை வழங்க கோரி நேற்று கடலூர் அலுவலகத்தில் வேலை நிறுத்தம் நடந்தது.இதையொட்டி வாயிற் கூட்டமும், ஆர்ப்பாட்டமும் சுஜாதா தலைமையில் நடந்தது.கோரிக்கைகளை விளக்கி கிளை செயலாளர் சுகுமாறன், கோட்ட இணை செயலாளர் மணவாளன் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன், பி.எஸ். என்.எல்., சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம், பாலகிருஷ் ணன் பேசினர். சுகுமார் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக