கடலூர் :
கடலூரில் நடந்த மக் கள் குறை தீர்வு கூட்டத் தில் பயனாளிகளுக்கு 12 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கடலூரில் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் சமூகநலத்துறையின் மூலம் மூவலூர் ராமாமிர்த அம்மையார் திருமண உதவித்திட்டத்தில் தலா 20 ஆயிரம் வீதம் 35 பேர்களுக்கு 7 லட்சம் ரூபாயும், தாட்கோ மூலம் செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்ற 25 மாணவிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் 5 லட்சம் ரூபாயும், பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் மூலம் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட மூவருக்கு இலவச கண் கண்ணாடிகளும், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறை மூலம் 4 நபர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், கை, கால் உறைகளை கலெக்டர் சீத்தாராமன் வழங்கினார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., நடராஜன், துணை ஆட்சியர் அழகுமீனா, ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் ஜெயக்குமார், தாட்கோ மேலாளர் தரணிதரன் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக