திட்டக்குடி :
திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் அறைக்கு பூட்டு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலூர் மாவட்டம், திட்டக்குடி பேரூராட் சிக்கு செயல் அலுவலர் பணியிடம் கடந்த சில மாதங்களாக காலியாக இருந்தது. இதனால் பிறப்பு, இறப்பு, சொத்துவரி விதிப்பு, குடிநீர் இணைப்பு மற்றும் மகப் பேறு திட்டத்தில் நிதியுதவி பெற சான்றிதழ் என அன்றாட அலுவலக பணிகள் முடங்கியது.
கவுன்சிலர்கள் கலெக்டரிடம் முறையிட்டதை தொடர்ந்து ஒரு மாதத் திற்கு முன் திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலராக பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். இருப் பினும் அவர் பணிக்கு வராமல், கூடுதல் பொறுப்பான ஸ்ரீமுஷ் ணம் அலுவலகத்திலேயே பணியாற்றி வருகிறார். திட்டக்குடியிலிருந்து செக்- புக், சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை ஊழியர்கள் தினந்தோறும் ஸ்ரீமுஷ்ணம் எடுத்து சென்று கையெழுத்து பெற்று வருகின்றனர்.இதனை கண்டித்து ராஜாஅலெக்சாண்டர் தலைமையில் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக் கள் திரண்டு நேற்று மதியம் 1.30 மணி அளவில் பேரூராட்சி அலுவலகத் தில் உள்ள செயல் அலுவலர் அறையை பூட்டினர். சேர்மன் மன்னன், சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கவுன்சிலர்கள் போராட்டம் குறித்து பேரூராட்சி உதவி இயக்குனருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. அவர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையேற்று கவுன்சிலர்கள், செயல் அலுவலர் அறையை திறந்து விட்டனர். இரண்டு நாளில் செயல் அலுவலர் திட்டக்குடியில் நிரந்தரமாக தங்கி பணியாற்றவில்லை என்றால் சாலை மறியல் செய்யப்படும் என அறிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக