உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 02, 2010

நெல்லிக்குப்பம் பெண்ணையாற்றில் விதிமுறை மீறல் : புதுச்சேரிக்கு வருமானம்; தமிழகத்திற்கு பாதிப்பு

நெல்லிக்குப்பம் : 

                நெல்லிக்குப்பம் பெண் ணையாற்றில் விதிமுறைகளை மீறி புதுச்சேரி பாசிக் நிறுவனம் மணல் எடுத்து வருவதால் கரை பாதிக் கும் அபாயம் ஏற்பட் டுள்ளது.
 
               நெல்லிக்குப்பம் அடுத்த வான்பாக்கம் - முள்ளிகிராம்பட்டு இடையே தமிழக பகுதியில் பெண்ணையாற்றின் கரை உள்ளது. ஆற்றின் மறுபுறம் புதுச்சேரி மாநிலம் மணல்மேடு கிராமம் உள்ளது. தமிழக கரை வரை ஆறு முழுவதும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தது என கூறுகின்றனர். இதை காரணம் கூறி அம்மாநில கரையோரம் மணல் எடுக்காமல் தமிழக கரையையொட்டி ஆற்றில் மணல் எடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
 
              புதுச்சேரி அரசின் பாசிக் நிறுவனமே மணல் குவாரியை நடத்துகிறது. பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் எடுக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் செல்கிறது. கரையில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் தான் மணல் எடுக்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி கரையோரம் மணல் எடுப்பதால் ஆற்றங்கரை பாதிக் கப்படும். மணல் குவாரியில் புதுச்சேரி அரசுக்கு வருமானம். ஆனால் தமிழக பகுதி பாதிக்கும் அபாயம் உள்ளது. அரசு நிறுவனமே இதுபோன்று நடப்பதால் யாரும் கேட்க முடியாமல் தவிக்கின்றனர். தமிழக எல்லையில் உள்ள ஆற்றின் கரை பலமிழப்பதால் மழைக் காலத் தில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தால், கரை உடைந்து தண்ணீர் ஊரினுள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு மேல் அகலமுள்ளஆற்றின் கரையோரம் மணல் எடுப்பதை தடுத்து நிறுத்த கடலூர் மாவட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior