கடலூர் :
தேசிய இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் கடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள உயர் நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி 6 நாள் முகாம் கடலூரில் பெரியார் கல்லூரியில் நேற்று துவங்கியது.மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் கணேசமூர்த்தி முன்னிலை வகித் தார். கல்லூரி முதல்வர் ரங்கநாதன் பயிற்சியை துவக்கி வைத்து பேசினார்.
கூடுதல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் பயிற்சி குறித்து விளக்கினார். கல்லூரி பேராசிரியர்கள் மனோகரன், தமிழாழி கொற்கை வேந்தன், கல்லூரி கம்ப்யூட்டர் துறைத் தலைவர் கீதா வாழ்த்துரை வழங்கினர். பெரியார் கல்லூரி கம்ப்யூட்டர் பயிற்சி விரிவுரையாளர்கள் சரளா, ராஜலட்சுமி, நடனம், சையதுமீரான், பன்னீர்செல்வம், சுரேஷ்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இப்பயற்சியில் 9 மற்றம் 10ம் வகுப்பைச் சேர்ந்த 80 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உதவி ஒருங்கிணைப்பாளர்கள் தணிகைவேல், மணிக்கண்ணன் செய்திருந்தனர். பயிற்சி 6ம் தேதி வரை நடக்கிறது. ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக