உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 02, 2010

ஆந்திராவில் இறந்தவர் உடல் 80 நாட்களுக்கு பின் பிரேத பரிசோதனை

பண்ருட்டி : 

                ஆந்திராவில் மர்மமான முறையில் இறந்த கூலி தொழிலாளியின் உடல், 80 நாட்களுக்கு பிறகு நேற்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(47).  இவரும் அதே பகுதியை சேர்ந்த சிலர் கடந்த நவம்பர் மாதம் கரும்பு வெட்டும் வேலைக்காக ஆந்திர மாநிலம் புத்தூருக்கு சென் றனர். நவ. 12ம் தேதி கிருஷ் ணமூர்த்தி கரும்பு தோட் டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
 
                   அவரது உடலை உறவினர்கள் மறுநாள் சொந்த கிராமத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர். இந்நிலையில் அவரது மகன் பிரபு, தனது தந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தி விசாரணை நடத்தக் கோரி  கடலூர் ஆர்.டி.ஓ.,விடம் மனு கொடுத்தார். புதுப்பேட்டை போலீசார் கடந்த 19ம் தேதி சந்தேக மரணப் பிரிவில் வழக்கு பதிந்தனர். திருத் துறையூர் சுடுகாட்டில் புதைக் கப்பட்ட கிருஷ்ணமூர்த்தியின் உடல் நேற்று மதியம் பண்ருட்டி தாசில்தார் பாபு, சப் இன்ஸ் பெக்டர் ராஜேந்திரன் முன்னிலையில் தோண்டி எடுக்கப் பட்டது. உடலை அவரது மகன் பிரபு அடையாளம் காட்டினார். அதனைத் தொடர்ந்து டாக்டர்கள் முருகன், கலையரசி, மருந்தாளுநர் இளங்கோவன் ஆகியோர் கிருஷ்ணமூர்த்தியின் உடற் கூறுகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த நவம்பர் மாதம் இறந்தவரின் உடல் 80 நாட் களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior