கடலூர் :
பதிவு செய்த நாளில் இருந்து வாரிய பயன்களை வழங்க கோரி தமிழ்நாடு கட்ட தொழிலாளர் சங்கத்தினர் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். நகர தலைவர்கள் கடலூர் ராமு, புவனகிரி வீரப்பன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கடந்த 2003ம் ஆண்டு முதல் முடக்கி வைத்துள்ள மனுக் களுக்கு உதவி நிதி வழங்க வேண்டும். பிற வாரியங்கள் போல் பதிவு செய்த நாளிலிருந்து வாரியப் பயன்களை வழங்க வேண்டும். நாலரை ஆண்டுகள் வாரிய உறுப்பினராக இருந்தவர்களுக்கு 60 வயதில் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். வழங்கப்படும் உதவித் தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட செயலாளர் சேகர் பேசினார். மாவட்டத் தலைவர் பாஸ்கர், ஏ.ஐ.டி.யூ.சி., ஜெகத்ரட்சகன், இந்திய கம்யூ., நகர செயலாளர் குளோப், பண் ருட்டி செயலாளர் முருகன், ராமநாதன், அய்யனார் உள்பட பலர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக